2012-08-14

எங்கிருந்து கூவ ?

காகித நாட்காட்டியின்
இன்னுமொறு  நாளாய்
இன்று சுதந்திர நாள்.
இல்லை! இல்லை!!
விடுதலை நாள்.

சுதந்திரம் அன்னியம்
என்றொரு கூட்டம்;
இன்னும் விடுதலை
அடைய  வில்லை
என்றொரு கூட்டம்;
இதற்கு நடுவே
என்ன நடந்தால்
எனக்கு என்ன?
என்றொரு கூட்டம்.

புயல் வேண்டாம்,
வெறும் தென்றலே போதும்
பக்கத்துக்கு வீட்டு
குப்பையை நம் வீட்டு
முற்றத்தில் சேர்க்க
என்று புரியாத
இப்பெருங் கூட்டத்தில்;
நான் எங்கிருந்து
கூவினாலும் உரைக்கபோவதில்லை
இந்நாள்  வர பலபேர்
உயிரையும் அதற்கு
மேலானவையும் இழந்தனர் என்று.
0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!