2012-05-20

நானும் அவைகளும்-9

"டேய்...டேய்..." வேலனின் குரல் நிகழ் காலம் இழுத்து வந்தது.

வழக்கம்போல் தேநீர் கடையில் ஓசி தேநீர் குடித்துவிட்டு, அதற்கு பணம் தர, கனவில் இருந்தவனை ஏதோ கனடாவில் இருக்கிறவனை இங்கிருந்தே குப்பிடுபவன் போல் கத்தி அழைத்தான்.

மிதிவண்டியை பத்து மிதி மிதிச்சா, வீட்டுல அம்மா கையால் வைத்த அருமையான தேநீர் கிடைக்கும். அதைவிட்டுட்டு இங்க குவளையை சரியாய் கழுவியும் கழுவாத கடைல தேநீர் குடிக்கிறேன். இன்னைக்கு மட்டுமா, இன்றோடு சரியாக இரண்டு வாரம் ஆயிற்று. சரியாய் சொல்லுனும்னா அவ சிரிச்ச நாளில் இருந்து. அன்று அவள் என்னை பார்த்து சிரித்ததை பார்த்த வேலனின் யோசனை வழக்கம் போல் ஒரு யோசனை சொன்னான். 

"வகுப்பு முடிந்து அவள் வீடு செல்லும் பேருந்து ஏற தேனீர் கடையருகே நிற்பாள், அப்பொழுது நாமும் அங்கே நிற்போம், சமயம் கிடைக்கும் பொழுது நீ பேசிடு".

இதற்கு முன் அவன் யோசனைகள், விளைவுகளை விட பக்க-விளைவுகளை தான் கொடுத்துள்ளன. இருந்தாலும், வேறு வழி இல்லாததாலும், அவள் சிரிப்பு தந்த நம்பிக்கையாலும் நான் ஒத்து கொண்டேன்.

வாரமும் இரண்டு ஆயிற்று, வருமானமும் கடைக்காரருக்கு நன்றாய் ஆயிற்று, அவளிடம் நான் பேசத்தான் சமயம் கிடைக்கவில்லை. 

இன்று கூட இரண்டு கடை தண்டி அவள் நின்று கொண்டு இருக்கிறாள். சாலையிலும் அதிக கூட்டமில்லை, பயத்தை தவிர்த்து அவளிடம் சொல்லிவிடலாமா?. நான் யோசித்த வேளையில் திடீரென்று பெரும் மழை வந்தது!!!

சாலையில் இருந்த சிறிது கூட்டமும் சிதறி ஓடியது, இருந்த ஐந்து, ஆறு கடைகளும் சிறிதாய் இருந்ததினால் மொத்தம் பத்து பேர் தான் அங்கு நின்று இருந்தோம். அதில் நான், வேலன், அவள், அவளின் மூன்று தோழிகள் அடக்கம். மற்ற ஐவரும் உள்ளூர் போல் தெரியவில்லை.  

தேனீர் கடையில் ரேடியோ பாடியது,
"நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி
நமை சேர்த்த...."எனக்கு என்னமோ ஆனது, வேலனை பார்த்து விட்டு, அவள் இருக்கும் கடை நோக்கி நகர்ந்தேன்.

அப்பொழுது...


  

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!