2011-08-27

நானும் அவைகளும் - 6

"நீங்களாவது புரிஞ்சிக்க மாட்டிங்களா? அடுத்த வாரம் காலாண்டு பரீட்சை, படிக்கறதுக்கு மெனக்கேட்டோ, பள்ளிக்கு வரோ பயந்தோ அவன் பொய் சொன்னால் நீங்க நாலு அடி வச்சு அனுப்பாம, ஒரு வாரம் கழிந்த பின்பு பொறுமையா கூட்டி வந்தா எப்படி? அப்புறம் பையன் மதிப்பெண் ஏன் கம்மியா இருக்குனு எங்க கிட்டயே கேட்பிங்க!! பள்ளில நாங்க நடத்துவதை வைத்து மட்டும் இல்லை, வீட்டுலயும் நீங்க நடந்துக்கிற முறைய பொறுத்துதான் அவன் மதிப்பெண் ஏறுவதும், இறங்குவதும்..........." 

வாரத்தின் முதல் நாள், அலுவலகம் வந்து முதல் வேலையாய் இப்படி எதிராளியை பேச விடாமல் அறிவுரை வழங்கிக்கொண்டு இருப்பது வேறு யாரும் அல்ல, என் பள்ளியின் முதல்வரே தான். அவரின் பாகவதர் தலை அலங்காரமும் (Hairstyle!!!), பாக்கியராஜ் கண்ணாடியும் இன்று கூட என் சிம்மசொப்பனமே

அவரின் முன்னே எதுவம் பேச முடியாமல், பக்கவாட்டில் நிற்கும் என்னை முறைத்தும், மனதிற்குள் அலுவலகத்துக்கு நேரம் ஆகுதே, பாகவதர் நம்பர் இரண்டு திட்டுமே (பி.கு. அவரின் மேலாளரும் பாகவதர் 'சிகை' மணியே) என்று நகட்டு சிரிப்புடன் நிற்பவர் வேறு யாரும் அல்ல, சாட்சாத் என் தகப்பானரே

அவர் செய்த தவறு என்னை இந்த பள்ளியில் சேர்த்தது.

சரி நாம பத்து பதினைந்து வருடம் வேலைக்கு போன பின்பு கூட டை, ஷூ எல்லாம் போட்டது கிடையாது. இந்த பள்ளில பையனை சேர்த்தால் LKG-ல இருந்தே இதெல்லாம் போடுவான், பின்பு படிப்பு முடிந்தவுடன் டாக்டரோ, இன்ஜீனியரோ சீக்கிரம் ஆகிடுவான் என்பது அவர்கள் கனவு. அப்படிப்பட்ட பெரும் கனவு சுமக்கும் அவர்களை, பள்ளி நிர்வாகங்கள் மிக மோசமாக தான் நடத்துகின்றது. ஒரு வாரம் விடுப்பு, அதுவும் உடல் நிலை மோசமானதால் எடுத்த விடுப்புக்கு, பெரும் குற்றவாளியை விசாரிப்பதுபோல் நடத்தினர். 

பின்பு சுதாரித்த என் தந்தை, மருத்துவர் (பி.கு. எங்கள் ஊர் டாக்டர், வேறு யாரையும் குறிப்படவில்லை, அவங்கெல்லாம் வேறு பல பொட்டி தூக்குவதில் பிஸியாக இருந்த காலம்) தந்த மருந்து குறிப்பு சீட்டு, எனக்கு உண்மையாகவே உடல்நிலை சரியில்லை என்பதற்கான ஒப்புமை சீட்டு (இப்பவே கண்ணை கட்டுதே - Medical certificate ) என மருந்து, மாத்திரை தவிற்று!!! அனைத்தையும் முதல்வரிடம் ஒப்படைத்தார். அனைத்தையும் சரி பார்த்த பின்பே, இரண்டு கண்ணாடிகளுக்கு ஊடே தன் கண்களை என் மேல் பதித்து "இப்போ உடம்பு பரவால்லையா ? " என்றார், எங்கள் Mr. Strict. 

இல்லைன்னு சொன்ன மட்டும் விடுப்பா கொடுக்க போறீங்க, போதும்பா உங்க விசாரணை கமிசன் என்று மனதிற்குள் கூறிக்கொண்டு. மண்டையை மட்டும் 'ஓகே' என்பதை உணர்த்துவது போல் ஆட்டினேன். பின்புதான் சிறிதாக சிரித்தார். 

இதற்குதானே காத்திருந்தோம் என்று நானும், அப்பாவும் அவரின் அறையை விட்டு வெளியே பிடித்தோம் ஓட்டம்,  நான் என் வகுப்பிற்கும், அவர் அவரின் அலுவலகத்திற்கும்.4 comments:

 
Back to top!