2011-07-29

நானும் அவைகளும் - 4

இனி 'பிளாஷ் பேக்' :


 (தமிழில் இதற்கு என்ன வார்த்தை...உனக்கு தான் தமிழ் மேல் ரொம்ப பற்றே !!! அப்படின்னு எல்லாம் சொல்லி சண்டைக்கு வரக்கூடாது. இப்பவே சொல்லிட்டேன், நான் நடை (முறை) தமிழில் தான் சொல்ல முடியும், எழுத முடியும்; மாற்ற நினைக்கக்கூடிய பழக்கம்.) 

நான்கு வருடங்களுக்கு முன்பு..."டேய், எனக்கு ஒரு படம் வரைஞ்சு கொடுடா !!!"

"உனக்கா !!!??? "

நான்தான் அந்த ஓவிய சிகாமணி!!!,  எதோ பெருசா வரைய தெரிஞ்சவன் அப்படி இப்படின்னு நினைக்காதிங்க, அந்த வகுப்பில் இருப்பவர்களை விட கொஞ்சம் நல்ல வரைவேன். வரைந்த படங்களை நண்பர்களுக்கு கொடுத்துவிடுவேன், சில நேரம் இலவசம், சில நேரம் பண்டமாற்றம். 

இன்று என் முன் நின்று படம் கேட்பவன், எங்கள் வகுப்பின் சீனியர். ஒரே வகுப்பில் எப்படி  சீனியர் என்று நீங்கள் கேட்டால், உங்கள் பள்ளியில் ஏதோ கோளாறு என்றே நான் கருத வேண்டும். எங்கள் வகுப்பில் இரண்டு மூன்று சீனியர் பசங்க இருந்தார்கள், அந்த இரண்டு, மூன்று பேரை விட இவன் இரண்டு, மூன்று வருட சீனியர்.  அன்றே தகவல் உரிமை சட்டம் (RTI) இருந்திருந்தால், எங்கள் பள்ளி நிர்வாகத்தினிடம் மனு பெற்று விசாரணை செய்திருக்கலாம். 

மனு கொடுத்ததிற்கு எல்லாம் பதில் கொடுத்து விட்டார்களா என்ன? சரி அரசியல் வேண்டாம், கதைக்கு வருவோம். 

சீனியரிடம் நான் அதிகம் பேசியது கூட இல்லை. அவன்கிட்ட யார் என்னை பத்தி சொல்லி, உசுபேத்திவிட்டானு தெரியலை. வில்லங்கம் புடிச்ச இவன் என்ன வரைய சொல்ல போறனோ. முடியாதுன்னு சொல்லமுடியாது. வேற வழி இல்லை, அவன்கிட்டயே கேட்போம்.

"சரி என்ன வரையனும் ?"

"எவ்வளவு காசு செலவானாலும் சரி, நாளைக்கே வேண்டும்"

"காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் டா, மொதல்ல என்ன வரையணும்னு சொல்லு"  (கேட்டா மட்டும் கொடுக்கவா போறான் !!)

என்னிடம் ஒரு வாழ்த்து அட்டையை நீட்டினான்..புரியலையா Greeting Card. 

பொறுமையாக அதை திறந்து பார்த்தால், அது ஒரு Valentine Card

.....

.........

அதில் ஒரு சிறுவன் சிறுமிக்கு ரோஸ் கொடுத்து கொண்டு இருந்தான்.வில்லங்கம் starts....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!