2011-06-13

நானும் அவைகளும் - 2

காலம்:  2000

அன்று அவள் சிரித்தாள் !

சிரித்த காரணம் இன்று வரை புலப்படவில்லை. அங்கு நான் வந்த காரணம் அறிந்து சிரிப்பதற்கும் வாய்ப்புகள் கிடையாது . இதற்கு முன் நான் அவளை கண்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

ஆனாலும் அங்கு நான் வரும் காரணம் கொஞ்சம் கேலி சிரிப்பை தூண்டகூடிய விஷயம்தான். தமிழ்நாட்டில் தமிழுக்கு சிறப்பு தனி வகுப்பு, tuition சென்றால் யார் தான் சிரிக்கமால் இருப்பார்கள். நான் tuition சென்றது நான் தமிழில் தேராமல் இருந்ததால் அன்று, எனக்கு தமிழ் மிக பிடித்தால் எடுத்த முடிவு. (பின் குறிப்பு : தமிழ் என்பது தமிழ் மொழியையே குறிக்கும்). எனது தமிழாசிரியரின் அலட்சிய போக்கினால் வந்த விபரீத முடிவே, என் தமிழ் tuition.

எப்பொழுதும் போல் தனி தமிழ் வகுப்பு முடிந்து வெளியே  வரும் சமயம் தான் அவளை கண்டேன்; அவள் சிரித்தாள். அவள் சாதாரணமாகவோ அல்லது நான் தனியே வரும் சமயமோ சிரித்திருந்தால் நான் அந்த முடிவை யோசனை செய்யாது இருந்திருப்பேன். 

இனி முடிவுகளும், விளைவுகளும்...

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!