2011-04-23
8:38:00 பிற்பகல்

தேடுதலும் தேடுதல் நிமித்தமும்

தேடுதல் வேட்கையில்
திக்கற்று நிற்கையில்
உள்ளும் புறமும் ஒன்றென்று
முன்னொரு முனி சொன்ன
செய்யுள் தோன்றியது

உள்தேடுதல் தொடங்கி
பல ஞாயிறு கடந்தபின்
தேடியவை கிடைக்காமல்
தேவைகள் குறைந்தன
வெற்றிடமும்  தோன்றியது

அமைதியும் அண்டி
வெற்றிடத்தை நிரப்பையில்
பார்வையும் நீண்டது
தெளிந்த பார்வையில்
தேடியவையும் தோன்றியது

தேடியவை தோன்றியபின்
மனம் தேர்ந்தெடுத்ததோ
முன் அரிதாய்
நான் தேடிய
பொருட்கள் அல்ல....

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!