2009-06-28

அழுகை....


எட்டு மணிநேர வேலை
முடித்து வீட்டுக்கு
திரும்ப கால் கடுக்க
நின்று பேருந்து
ஏறினேன்..

வழக்கம்போல் கூட்டம்
சிக்கி தவித்து
ஒரு இடம் பார்த்து
நின்றேன்...

பலரின் புலம்பல்
சிலரின் அலட்டல்
என்றுஇருந்த கூட்டத்தின்
நடுவே

நடுத்தர வயது
தாய் நின்றுஇருந்தால்
தன் கைகுழந்தைஉடன்
பேருந்தின் ஆட்டத்தில்
அவளும் ஆட..
குழந்தையோ
அல்லாடியது..

இரைச்சலின் காரணத்தினால்
அழுதது வீறிட்டு...
சேயின் தவிப்பில்
தாய்மனம் துடித்தது...

உண்மையில் மக்கள்
முழ்கிதான் போயிருந்தனர்
அவரவர் தம்
புலம்பலிலும் அலட்டலிலும்

அடுத்தவர் பிரச்னை
நம்மை சேராது
என்றேதேனும் தீர்மானமா?
அல்லது எனகேனும்
பிரச்சனையா ?

என்னை மட்டும்
ஏதோ செய்கின்றது
அந்த அழுகை
வீறிட்ட அழுகை
அக்குழந்தையின் அழுகை...
நாளைய உலகின் அழுகை...

0 comments:

கருத்துரையிடுக

 
Back to top!